சகல துறையிலும் கலக்கிய தமிழக வீரர்! இந்திய அணி அபார வெற்றி

PARIS TAMIL  PARIS TAMIL
சகல துறையிலும் கலக்கிய தமிழக வீரர்! இந்திய அணி அபார வெற்றி

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 8 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
 
அவுஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இராண்டாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி, நாக்பூரில் நடைபெற்றது.
 
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலிய அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
 
இதன்படி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.2 ஓவர்களில் சகல விக்கடடுக்களையும் இழந்து, 250 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
 
துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் விராட் கோஹ்லி 116 ஓட்டங்களையும், தமிழக வீரர் விஜய் சங்கர் 46 ஓட்டங்களையும், பெற்றுக் கொடுத்தனர்.
 
பந்து வீச்சில் பெட் கம்மிங்க்ஸ் 4 விக்கட்டுக்களையும், எடம் சம்பா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
 
தொடர்ந்து 251 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, 49.3 ஓவர்களில் சகல விகட்டுக்களையும் இழந்து, 242 ஓட்டங்களை மாத்திரமே வெற்று 8 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவிக் கொண்டது.
 
துடுப்பாட்டத்தில், ஸ்டொய்னீஸ் 52 ஓட்டங்களையும், ஹேண்ட்ஸ்கொம்ப் 48 ஓட்டங்களையும், பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில், குல்தீப் யாதவ் 3 விக்கட்டுக்களையும், பும்ரா, விஜய்சங்கர் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
 
போட்டியின் இறுதி ஓவரில் 11 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், பந்து வீசிய விஜய் சங்கர் முதல் மூன்று பந்துகளில் இரண்டு ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கட்டுக்களையும் வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.
 
இந்த வெற்றி இந்திய அணியின் 500 வது வெற்றியாக அமைந்துள்ளமை விசேட அம்சமாகும். இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி, 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.
 
இவ்விரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி 8 ஆம் திகதி ராஞ்சியில் நடைபெறவுள்ளது.

மூலக்கதை