ஆயிரங்கால் மண்டபம்; நடிகை ரோஜா உறுதி

தினமலர்  தினமலர்
ஆயிரங்கால் மண்டபம்; நடிகை ரோஜா உறுதி

“ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், திருப்பதி திருமலையில் இடிக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் மீண்டும் கட்டப்படும்'' என்று நகரி தொகுதி எம்.எல்.ஏ.,வும்; நடிகையுமான ரோஜா உறுதியளித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.,வும் நடிகையுமான ரோஜா, சாமி தரிசனம் செய்தார். பின்,அவர் அளித்த பேட்டி:

சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து, பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆனால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவோ, 'மோடி ராஜினாமா செய்ய வேண்டும்' என்று கூறி வருகிறார். இது உயிரிழந்த ராணுவ வீரர்களை அவமானப்படுத்தி; கொச்சைப்படுத்தும் செயல். கோதாவரி புஷ்கரத்தின் போது, சந்திரபாபு நாயுடு, தனது விளம்பரத்திற்காக நடத்திய படபிடிப்பின் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில், முப்பது பேர் பலியானார்கள். அப்போது, சந்திரபாபு நாயுடு ஏன் ராஜினாமா செய்யவில்லை. அவர் மீது எதற்காக வழக்குப் பதிவு செய்யவில்லை?' என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய நடிகை ரோஜா, 'திருப்பதியில் ஆயிரங்கால் மண்டபத்தில் வெங்கடேஸ்வர சுவாமி பக்தர்களுக்கு ஆசீர்வதிப்பதாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தை, சந்திரபாபு நாயுடு, தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, இடித்து தரைமட்டமாக்கினார். ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப்பட்ட இடத்தில், மீண்டும் அதை கட்டுவதற்காக அமராவதி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், அதே இடத்தில் மீண்டும் ஆயிரங்கால் மண்டபம் கட்டப்படும்.

இவ்வாறு நடிகை ரோஜா பேட்டியில் கூறியிருக்கிறார். இதற்கு பதிலளிக்க முடியாமல் சந்திரபாபு நாயுடு தடுமாறி வருகிறார்.

மூலக்கதை