தமிழிலும் வெளியாகும் அனுஷ்காவின் சைலன்ட் த்ரில்லர் படம்

தினமலர்  தினமலர்
தமிழிலும் வெளியாகும் அனுஷ்காவின் சைலன்ட் த்ரில்லர் படம்

அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் புதிய தெலுங்கு படம் சைலன்ட். காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட், கிரண் ஸ்டூடியோஸ் மற்றும் பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனங்கள் இணைந்து பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்தப் படத்தை ஹேமந்த் மதுக்கர் இயக்குகிறார்.

அனுஷ்காவுடன் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பாராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். மாதவன் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். கோபி சுந்தர் இசை அமைக்கிறார். ஷானியல் டியோ ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் தமிழிலும் வெளிவருகிறது. தமிழுக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த மெர்குரி படத்தின் பாணியிலான, சைலண்ட் த்ரில்லர் படம். படத்தில் வசனங்கள் இருக்காது. பின்னணி இசையும், சிறப்பு ஒலியும் மட்டும் இருக்கும். இதில் அனுஷ்கா காது கேட்கும் திறனற்ற பெண்ணாக நடித்திருக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் ஹேமந்த் மதுக்கர் கூறியதாவது: ஒரு சைலண்ட் சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்த படத்தில், அட்மாஸ் ஒலி வடிவமைப்பு, பின்னணி இசை மற்றும் மிக நேர்த்தியான காட்சியமைப்புகள் என ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் உயர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களை கொண்டு இதுவரை உணர்ந்திராத மிகச்சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறார்கள். இதற்காக தான் மொத்த குழுவும் கடுமையாக உழைத்து வருகிறோம் என்கிறார்.

மூலக்கதை