தங்கம் விலை தொடர்ந்து உச்சம் : ரூ.26 ஆயிரத்தை நெருங்குகிறது

தினமலர்  தினமலர்
தங்கம் விலை தொடர்ந்து உச்சம் : ரூ.26 ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னை : தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதேநிலை நீடித்தால் இன்னும் ஓரிரு நாளில் ரூ.26 ஆயிரத்தை எட்டும் என தெரிகிறது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(பிப்., 20) காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,230க்கும், சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.25,840க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.33,770க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 40 காசுகள் உயர்ந்து ரூ.44க்கு விற்பனையாகிறது.

மூலக்கதை