உலகக் கிண்ணத்தின்போது பாகிஸ்தானுடனான போட்டியை தவிர்க்குமாறு வேண்டுகோள்!

PARIS TAMIL  PARIS TAMIL
உலகக் கிண்ணத்தின்போது பாகிஸ்தானுடனான போட்டியை தவிர்க்குமாறு வேண்டுகோள்!

2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் கிளப் வலியுறுத்தியுள்ளது. 
 
காஷ்மீரில் உள்ள புலவாவமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் அண்மையில் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டிக்கும் வகையிலேயே மேற்கண்ட கோரிக்கையை குறித்த கிரிக்கெட் கிளப் விடுத்துள்ளது. 
 
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒரு அங்கமான கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியாவின் (சி.சி.ஐ) தலைமை அலுவலகம் மும்பை பிராபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் உள்ளது. 
 
இந்த கிளப் சார்பில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான்கானை கெளரவிக்கும் வகையில் அவரது புகைப்படம் இங்குள்ள உணவக அறையில் வைக்கப்பட்டு இருந்தது. 
 
இதே போல் சக வீரர்களுடன் இம்ரான்கான் இருக்கும் புகைப்படடம் ஒன்றும் சுவற்றில் தொங்கவிடப்பட்டு இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிளப் நிர்வாகிகளின் முடிவின்படி இவ்விரு புகைப்படங்களும் இப்போது அகற்றப்பட்டுள்ளது.
 
இந் நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்ட அந்த கிளப்பின் செயலாளர் சுரேஷ் பாப்னா, 
 
‘பயங்கரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். சி.சி.ஐ. ஒரு விளையாட்டு அமைப்பு தான். ஆனால் விளையாட்டை விட தேசத்தின் நலன் தான் எங்களுக்கு முக்கியம். இங்கிலாந்தில் மே மாதம் நடக்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். 

மூலக்கதை