மிளகு விலை தொடர்ந்துஇறக்குமதியால் மேலும் பாதிப்பு

தினமலர்  தினமலர்
மிளகு விலை தொடர்ந்துஇறக்குமதியால் மேலும் பாதிப்பு

கம்பம்:மிளகு விலை சரிவடைந்துள்ளதால், விவசாயிகள், வியாபாரிகள் பரிதவிக்கின்றனர்.


இந்நிலையில், இலங்கையிலிருந்து, 2,000 டன் மிளகு இறக்குமதி செய்யப்படுவதால், மேலும் விலை குறையும் என, புலம்புகின்றனர்.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜாக்காடு, ராஜகுமார், பூப்பாறை, வயநாடு மாவட்டங்களில் அதிகளவில் மிளகு சாகுபடி செய்யப்படுகிறது.


மிளகு விலை, சில வாரங்களாக கடுமையாக சரிவடைந்து வருகிறது. கிலோ, 700 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வந்த நிலையில், தற்போது, 340 – 370 ரூபாயாக குறைந்துள்ளது.கள்ள மார்க்கெட்டில் அதிக வரத்தாவது தான், விலை சரிவிற்கு காரணம் என கூறப்படுகிறது.


இது குறித்து, மிளகு வியாபாரிகள் கூறியதாவது:இலங்கையிலிருந்து, 2,000 டன் மிளகு, மும்பை, குஜராத், தமிழகம், ஆந்திரா துறைமுகங்களில் இறங்கியுள்ளது.இலங்கையுடன் இந்தியாவிற்கு வர்த்தக ஒப்பந்தம் இருப்பதால், வரி அதிகம் இருக்காது.அதனால், வியட்னாம் மிளகை வாங்கி, வரி ஏய்ப்பு செய்து, இலங்கை மிளகு என்று கூறி இறக்குமதி செய்துள்ளனர்


.‘இதனால், இந்திய மிளகிற்கு விலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். ஏற்கனவே விலை குறைந்து வரும் நிலையில், இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். ‘இந்த இறக்குமதி தொடர்பாக விசாரிக்க, மத்திய வர்த்தக அமைச்சர், சுரேஷ் பிரபுவிற்கு கோரிக்கை விடுத்துள்ளோம்’ என்றனர்.

மூலக்கதை