முட்டை விலை வெயிலால் உயர்வு

தினமலர்  தினமலர்
முட்டை விலை வெயிலால் உயர்வு

நாமக்கல்:உற்பத்தி, 10 சதவீதம் குறைந்ததால், தேவை அதிகரித்து முட்டை கொள்முதல் விலை, ஆறு நாட்களில், 20 காசுகள் உயர்ந்துள்ளது.


நாமக்கல், சேலம் மாவட்டத்தில், 1,000 பண்ணைகளில், ஐந்து கோடி கோழிகள் மூலம் தினமும், 3.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, நெக் நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்களிடமிருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும்.


ஜன., 1ல், 430 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்ட கொள்முதல் விலை, 5ல், 440; 7ல், 445 என உயர்ந்தது. ஆனால், 12ல், 435; 19ல், 425; 21ல், 415 என சரிந்து, மீண்டும், 24ல், 5 காசுகள் உயர்த்தப்பட்டு, 420 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.அதையடுத்து, 2ல், 5 காசுகள் உயர்த்தப்பட்டு, 425; 4ல், 5 காசுகள் அதிகரித்து, 430; நேற்று முன்தினம், 10 காசுகள் உயர்ந்து, 440 என, ஆறு நாட்களில், 20 காசுகள் உயர்ந்துள்ளன.


இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர், வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:கடந்த ஒரு வாரமாக, வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால், வழக்கத்தை காட்டிலும் முட்டை உற்பத்தி, 10 சதவீதம் குறைந்துள்ளது. அதனால், தேவை அதிகரித்து, கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை