சிந்துபாத் டப்பிங்கை தொடங்கிய விஜய் சேதுபதி

தினமலர்  தினமலர்
சிந்துபாத் டப்பிங்கை தொடங்கிய விஜய் சேதுபதி

பேட்ட படத்தை அடுத்து சூப்பர் டீலக்ஸ், கடைசி விவசாயி, சிந்துபாத், மாமனிதன் என பல படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இவற்றில் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கும், சிந்துபாத் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் பொங்கல் அன்று வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் தான் நடித்துள்ள காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை தொடங்கி விட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. இறைவி படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.

மூலக்கதை