பேட்ட வெற்றியை கொண்டாடிய பிருத்விராஜ்

தினமலர்  தினமலர்
பேட்ட வெற்றியை கொண்டாடிய பிருத்விராஜ்

ரஜினி நடித்துள்ள பேட்ட படம் வெளியாகி பத்து நாட்களுக்கு மேல் ஆன நிலையிலும் வசூலில் சாதனை படைத்து, இன்னும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.. இதுமட்டுமல்ல கேரளாவிலும் பேட்ட படத்திற்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்து வருகிறது. இதனால் இந்த படத்தை கேரளாவில் வாங்கி வெளியிட்ட நடிகர் பிருத்விராஜ் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்..

அதேபோல படமும் வாங்கியதை விட நினைத்து பார்க்காத அளவுக்கு அவருக்கு வசூலை வாரித்தரவே, சந்தோசத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பேட்ட படத்தின் இரண்டாவது வார போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயம்தான் ஆச்சரியமானது.. அதாவது, “சிறந்த நடிகர்கள் பலர் இருக்கலாம்.. சிறந்த ஜாம்பவான்கள் பலர் இருக்கலாம்.. ஆனால் சூப்பர் ஸ்டார் என்றால் ஒரே ஒருவர் மட்டுமே” என அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார்.. மேலும் பேட்ட படத்தின் சக்சஸ் மீட்டையும் ரசிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் பிருத்விராஜ்.

மூலக்கதை