கனடா தமிழ் இருக்கைக்கு வாழ்த்துப்பாடல் அமைக்கும் இமான்

தினமலர்  தினமலர்
கனடா தமிழ் இருக்கைக்கு வாழ்த்துப்பாடல் அமைக்கும் இமான்

கனடாவின் பிரபல டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான இருக்கை அமைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. இதற்காக உலகளவில் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இங்கு அமைய உள்ள இருக்கைக்கான வாழ்த்துப்பாடலை உருவாக்கும் பணி, இசையமைப்பாளர் இமானுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதோடு, தமிழ் கனடா தமிழ் காங்கிரஸ் சார்பில் இவருக்கு, மாற்றத்திற்கான தலைவர் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இதை டுவிட்டரில் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ள இமான், "இந்த வாய்ப்பை வழங்கிய கனடா தமிழ் அமைப்புக்கு நன்றி, தமிழ்வாழ்த்து பாடலுக்கு இசையமைப்பது பெருமையாக உள்ளது. வாழ்க தமிழ்" என பதிவிட்டிருக்கிறார்.

மூலக்கதை