60 சதவீத தொழிலாளர்கள் ‘ஆப்சென்ட்’; திருப்பூர் நிறுவனங்கள் கவலை

தினமலர்  தினமலர்
60 சதவீத தொழிலாளர்கள் ‘ஆப்சென்ட்’; திருப்பூர் நிறுவனங்கள் கவலை

திருப்பூர் : திருப்பூர் நிறுவனங்களில் பொங்கல் பண்டிகைக்குப்பின், 60 சதவீத தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாததால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பனியன் தொழிலாளர்களுக்கு கடந்த, 13ம் தேதி முதல், ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது. சொந்த ஊர் சென்ற தொழிலாளர்களில், 70 சதவீதம் பேர் விடுமுறை முடிந்து, நேற்று பணிக்கு திரும்புவர் என, எதிர்பார்க்கப்பட்டது; ஆனால், 40 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு திரும்பினர்.

ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலர் விஜயகுமார் நேற்று கூறியதாவது:ஆடை தயாரிப்பு அவசரம் என்பதால், ஏற்றுமதி நிறுவனங்கள், 18ம்தேதி முதல் இயக்கத்தை துவக்கிவிட்டன. சொந்த ஊர் செல்லாத வட மாநில தொழிலாளர்கள், தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.விடுமுறை முடிந்து இன்று, 60 முதல், 70 சதவீத தொழிலாளர்கள் பணிக்கு திரும்பிவிடுவர் என, எதிர்பார்க்கப்பட்டது; ஆனால், 40 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு திரும்பியுள்ளனர்.

போதுமான தொழிலாளர்கள் இல்லாததால், ஆடை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பில் தாமதம் ஏற்படுவதால் ஆடைகளை அதிக செலவில், விமானத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பும் நிலை உருவாகியுள்ளது.இவ்வாறு, விஜயகுமார் தெரிவித்தார்.

மூலக்கதை