பரிஸ் - உணவகத்தின் அறையில் சடலமாக பெண் மீட்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ்  உணவகத்தின் அறையில் சடலமாக பெண் மீட்பு!!

 

பரிசில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. 
 
பரிஸ் 14 ஆம் வட்டாரத்தின் Boulevard Saint-Jacques இல் உள்ள Marriott உணவகத்தில் இருந்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் அதே உணவகத்தின் துப்பரவு பணியாளர் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. தகவல் கிடைத்ததை அடுத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சம்பவ இடத்து விரைந்த காவல்துறையினர், உணவகத்தில் உள்ள அறை ஒன்றுக்குள் தரையில் குறித்த சடலம் கிடப்பதை பார்த்துள்ளனர். சடலத்துக்கு அருகே கழுத்தடியில் கயிறு ஒன்று இருந்துள்ளது. இருப்பினும் இது தற்கொலை இல்லை எனவும், கடிதங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். 
 
தீயணைப்பு படையினர் சில முதலுதவி சிகிச்சைகளை முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் குறித்த பெண்ணை காப்பாற்ற முடியவில்லை. விசாரணைகளை ஆரம்பித்துள்ள 14 ஆம் வட்டார காவல்துறையினர் முதல்கட்டமாக உணவக அறையை சீல் வைத்துள்ளனர். உயிரிழந்த பெண் 27 வயதுடையவர் எனவும் கியூபா நாட்டு குடியுரிமை கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை