சொன்னதை செய்த இளையராஜா

தினமலர்  தினமலர்
சொன்னதை செய்த இளையராஜா

விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் என்ற படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். எஸ்என்எஸ் மூவிஸ் சார்பில் கவுசல்யா ராணி தயாரிக்க, பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இருதினங்களுக்கு முன்னர் சென்னையில் துவங்கியது. இளையராஜா முன்னின்று படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இதனிடையே இப்படத்தில் 9 கல்லூரி மாணவிகளுக்கு வாய்ப்பு அளித்து பாட வைத்திருக்கிறார் இளையராஜா. சமீபகாலமாக கல்லூரி விழாக்களில் பங்கேற்றும் வரும் இளையராஜா, சிறப்பாக பாடிய 9 கல்லூரி மாணவிகளை தேர்ந்த்தெடுத்து, தனது படத்தில் பாட வாய்ப்பு தருவதாக சமீபத்தில் கூறியிருந்தார். அதை உடனடியாக நிறைவேற்றும் பொருட்டு, தமிழரசன் படத்தில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளார். இதனால் அந்த 9 மாணவிகளும் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.

மூலக்கதை