அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும் பேரன்பு - யாத்ரா

தினமலர்  தினமலர்
அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும் பேரன்பு  யாத்ரா

மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் ஒருபக்கம் படங்கள் உருவாகி கொண்டிருக்க, அதையும் தாண்டி மற்ற தென்னிந்திய மொழிகளிலும் தனது கவனத்தை செலுத்திவறுகிறார் மம்முட்டி. அந்தவிதமாக தற்போது தெலுங்கில் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாறாக உருவாகியுள்ள யாத்ரா படத்தில் நடித்து முடித்துவிட்டார் மம்முட்டி. இந்த படம் கடந்த டிசம்பரிலேயே வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் தேதி தள்ளி வைக்கப்பட்டு, தற்போது வரும் பிப்-8ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக மம்முட்டி நடித்து தமிழில் நடித்துள்ள பேரன்பு படம் வரும் பிப்-1ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராம் இயக்கியுள்ள இந்தப்படம் தயாராகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டாலும் நிறைய சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளை கைப்பற்றியுள்ளது. அப்படிப்பட்ட அங்கீகாரத்துடன் இந்த படத்தை வரும் பிப்-1ம் தேதி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கிறார்கள். ஏழு நாள் இடைவெளியில் இரண்டு படங்கள் வெளியாவது அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் தான்.

மூலக்கதை