பிரியதர்ஷனின் படப்பிடிப்பில் இணைந்தார் சுனில் ஷெட்டி

தினமலர்  தினமலர்
பிரியதர்ஷனின் படப்பிடிப்பில் இணைந்தார் சுனில் ஷெட்டி

பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் மலையாளம், தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் கால் பதித்து தனது திறமையை நிரூபித்தவர். அப்படி இந்தியில் அவர் படங்களை இயக்கிய போது அவருக்கு ஆதரவு கொடுத்து தொடர்ந்து அவரது படங்களில் நடித்த ஹீரோக்களில் முக்கியமானவர் சுனில் ஷெட்டி..

இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றி சும்மா பத்து வருடங்கள் ஆன நிலையில் தற்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளத்தில் பிரமாண்டமாக உருவாகிவரும் வரலாற்று படமான 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்கிற படத்தில் முக்கியமான கடற்படை வீரர் கேரக்டரில் நடிக்கிறார் சுனில் ஷெட்டி.

சமீபத்திய படப்பிடிப்பில் சுனில் ஷெட்டி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அர்ஜுன், பிரபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்

மூலக்கதை