இந்தியன்-2 படத்தை வாழ்த்திய ஏ.ஆர்.ரகுமான்

தினமலர்  தினமலர்
இந்தியன்2 படத்தை வாழ்த்திய ஏ.ஆர்.ரகுமான்

கடந்த 22 வருடங்களுக்கு முன்பு கமலை வைத்து ஷங்கர் இயக்கிய படம் இந்தியன். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்டாகின.

ஆனபோதும் தற்போது மீண்டும் கமல்-ஷங்கர் இணைந்துள்ள இந்தியன்-2 படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இடம்பெறவில்லை. அவருக்குப்பதிலாக இசையமைப்பாளர் அனிருத் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 18-ந்தேதி தொடங்கியிருக்கிறது. இந்தநிலையில், தனது டுவிட்டரில் இந்தியன்-2 படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். அதையடுத்து அவருக்கு டைரக்டர் ஷங்கர் நன்றி தெரிவித்திருக்கிறார்.

மூலக்கதை