காவல்துறையினரின் வன்முறைகளை புகைப்படங்களாக்கிய போராளிகள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
காவல்துறையினரின் வன்முறைகளை புகைப்படங்களாக்கிய போராளிகள்!!

இன்று சனிக்கிழமை நாடு முழுவதும் பரவலாக பல்வேறு நகரங்களில் மஞ்சள் மேலங்கி போராட்டம் இடம்பெற்றது. குறிப்பிடத்தக்க அளவு வன்முறைகள் எதுவும் இடம்பெறவில்லை என்றபோதும், பல இடங்களில் விதம் விதமான கோஷங்களுடன் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. 
 
பரிசில் Invalides மற்றும் place de la République இல் பல நூறு ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்தனர். Invalides பகுதியில், இதுவரை இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் போது காவல்துறையினரின் தாக்குதலில் காயமடைந்தவர்களின் புகைப்படங்களை தொகுத்து மிகப்பெரிய புகைப்படம் ஆக்கி, அதனை ஆர்ப்பாட்டத்தில் வைத்திருந்தனர். 
 
 
 
தவிர, Caen நகரில் குவிந்த சில நூறு ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசை நோக்கி 'நடுவிரலை' காண்பிப்பது போன்று இராட்சத கைகளை செய்து கைகளில் பிடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
 
 
des Invalides பகுதியில் மற்றுமொரு குழுவினரிடையே சவப்பெட்டி போன்று உருவத்தினரை பிடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'தாம் இறந்துவிட்டோம்' என அவர்கள் அதன் மூலம் குறிப்பிட்டனர்.
 

மூலக்கதை