தங்கம் விலை சரிவு; வெள்ளி உயர்ந்தது

தினமலர்  தினமலர்
தங்கம் விலை சரிவு; வெள்ளி உயர்ந்தது

புதுடில்லி : நான்கு நாட்களாக, சுத்த தங்கம் விலை, உயர்ந்து வந்த நிலையில், நேற்று சரிவைக் கண்டது.

டில்லி, தங்கம், வெள்ளி சந்தையில், நேற்று, 10கிராம் தங்கம் விலை, முன்தினத்தை விட, 80 ரூபாய் குறைந்து, 33 ஆயிரத்து, 220 ரூபாயாக சரிவடைந்தது.முந்தைய நான்கு நாட்களில், 10 கிராம் சுத்த தங்கம் விலை, 425 ரூபாய் அதிகரித்து இருந்தது. நேற்று, வெள்ளி விலை, கிலோவுக்கு, 180 உயர்ந்து, 40 ஆயிரத்து, 380 ரூபாய்க்கு விற்பனையானது.

சர்வதேச சந்தையில் தங்கத்திற்கான தேவை குறைந்ததும், உள்நாட்டு ஆபரண துறையினரின் கொள்முதலில் சரிவும், விலை குறைய காரணம்.தொழிற்சாலைகள், நாணயம் தயாரிப்போர் ஆகியோருக்கு வெள்ளி அதிகம் தேவைப்பட்டதால், அதன் விலை உயர்ந்துள்ளது என, தங்கம், வெள்ளி சந்தையினர் தெரிவித்தனர்.

சென்னையில் நேற்று, 1 சவரன் ஆபரண தங்கத்தின் விலை, 24ஆயிரத்து800 ரூபாயாக இருந்தது. ஒரு கிலோ வெள்ளி, 42 ஆயிரத்து, 700 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேச சந்தையில், தங்கம் விலை குறைந்தபோதிலும், வெள்ளி விலை மாற்றமின்றி இருந்தது.

நேற்று, நியூயார்க்கில், 1 அவுன்ஸ் தங்கம், 1,292 டாலராக சரிவடைந்தது. ஒரு அவுன்ஸ் வெள்ளி, 15.58 டாலர் என, மாற்றமின்றி காணப்பட்டது.

மூலக்கதை