Seine-et-Marne - தொடரூந்து தண்டவாளத்தை கடந்த ஒட்டகம்! - போக்குவரத்து தடை!!

PARIS TAMIL  PARIS TAMIL
SeineetMarne  தொடரூந்து தண்டவாளத்தை கடந்த ஒட்டகம்!  போக்குவரத்து தடை!!

இன்று வியாழக்கிழமை காலை Melun மற்றும் Montargis நகரங்களை இணைக்கும் Line R சேவை தடைப்பட்டது. தொடரூந்து தண்டவாளத்தை ஒட்டகம் ஒன்று கடந்ததால் இந்த போக்குவரத்து தடைப்பட்டது. 
 
காலை 9 மணிக்கு இந்த சேவை தடைப்பட்டது. தண்டவாளத்தை ஒட்டகம் ஒன்று கடந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Melun இல் இருந்து Montargis நகர் நோக்கி,  R Transilien தொடரூந்து சென்றுகொண்டு இருந்ததாகவும், திடீரென ஒட்டகம் வழியை மறித்ததால், தொடரூந்து வேகம் கட்டுப்படுத்தப்பட்டு நிறுத்தப்பட்டது. 
சில நிமிடங்கள் வரை இந்த போக்குவரத்து தடைப்பட்டது. அதற்குள்ளாக பல பயணிகள் இச்சம்பவத்தினை புகைப்படமாக எடுத்தனர். ஒட்டகம் பின்னர் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டது. ஒட்டகத்தின் உரிமையாளர் தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 
 
 

மூலக்கதை