Arc de Triomphe : காவல்துறை அதிகாரியை தாக்கிய மஞ்சள் மேலங்கி போராளி! - கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
Arc de Triomphe : காவல்துறை அதிகாரியை தாக்கிய மஞ்சள் மேலங்கி போராளி!  கைது!!

காவல்துறை அதிகாரியை தாக்கிய வழக்கில் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 
 
கடந்த டிசம்பர் 1 ஆம் திகதி இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் காவல்துறையினருக்கு எதிராக பல்வேறு தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன. அந்த சம்பவத்தில் தொடர்புடைய பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் Arc de Triomphe பகுதியில் வைத்து காவல்துறை அதிகாரி ஒருவரை தாக்கியுள்ளார். 
 
சில காணொளிகளின் அடிப்படையில் குறித்த நபர் தேடப்பட்டு வந்து, கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

மூலக்கதை