ஆயுள் காப்பீடு பிரிமியம் வசூலில் புதிய சாதனை

தினமலர்  தினமலர்
ஆயுள் காப்பீடு பிரிமியம் வசூலில் புதிய சாதனை

பெங்களூரு : கடந்த, 2017 – -18ம் நிதியாண்டில், ஆயுள் காப்பீடு துறையின் பிரிமியம் வருவாய், 4.60 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையமான, ‘இரிடா’ வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, 2016 –- 17ம் நிதியாண்டை விட, 2017- – 18ம் நிதியாண்டில், ஆயுள் காப்பீடு பிரிமியம் வருவாய், 10 சதவீதம் உயர்ந்து, 4.60 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில், ஆயுள் காப்பீடுதாரர் பிரிமியத்தின் பங்கு, 2.5 சதவீதத்தில் இருந்து, 2.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஆயுள் காப்பீடு சந்தையில், எல்.ஐ.சி.,யின் பங்களிப்பு, 71.8 சதவீதத்தில் இருந்து, 69.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. தனியார் துறையைச் சேர்ந்த, 23 நிறுவனங்களின் பங்கு, 28.2 சதவீதத்தில் இருந்து, 30.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த நிதியாண்டில், எல்.ஐ.சி.,யின் மொத்த பிரிமியம் வருவாய், 3.20 லட்சம் கோடி ரூபாய். இது, தனியார் துறையில், 1.40 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை