தொழில் அமைப்புகளுடன் ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு

தினமலர்  தினமலர்
தொழில் அமைப்புகளுடன் ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு

புதுடில்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், இன்று, தொழில் அமைப்புகளை சார்ந்தவர்களை சந்தித்து, அவர்களது பிரச்னைகள் குறித்து அறிந்து கொள்ள இருக்கிறார்.

கடந்த மாதம், இந்திய ரிசர்வ் வங்கியின், 25வது கவர்னராக சக்திகாந்த தாஸ் பதவியேற்ற பின், பல்வேறு தரப்பினரை சந்தித்து வருகிறார்.குறிப்பாக வங்கிகள், வங்கி சாரா அமைப்புகள் சிறு, குறு, தொழில் நிறுவன பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக இன்று, தொழில் அமைப்புகளை சந்திக்க இருப்பதாக, கவர்னர், ‘டுவிட்டரில்’ தெரிவித்துள்ளார்.

வட்டி விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் கூட்டம், பிப்ரவரி, 5 முதல் 7ம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் அதிகரிக்கப்படுமா என்பது குறித்து, இரு விதமான கருத்துகள் நிலவி வருகின்றன.

சிறு, குறு தொழில் பிரிவினரும், வட்டி விகிதம் குறித்த பலத்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். ரிசர்வ் வங்கியின் இதற்கு முந்தைய கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதம் எந்த மாற்றமும் செய்யப்படாமல், 6.5 சதவீதமாகவே தொடரும் என அறிவிக்கப்பட்டது.

மூலக்கதை