கோவை ஜி.எஸ்.டி., ரூ.1,832 கோடி வசூல்

தினமலர்  தினமலர்
கோவை ஜி.எஸ்.டி., ரூ.1,832 கோடி வசூல்

திருப்பூர்:கோவை கோட்ட வணிக வரித் துறைக்கு, 2018ல், 1,832.55 கோடி ரூபாய் வரி வசூ­லா­கி­உள்­ளது.


தமி­ழக வணிக வரித் துறை­யின் கீழ், கோவை, திருப்­பூர், நீல­கிரி உட்­பட, மூன்று வரு­வாய் மாவட்­டங்­க­ளு­டன், கோவை வணிக வரி கோட்­டம் இயங்­கு­கிறது. கோட்­டத்­தில், 1.25 லட்­சம் வர்த்­த­கர்­கள், ஜி.எஸ்.டி., பதிவு செய்­துள்­ள­னர்.


கடந்த, 2018 ஜன., முதல், டிச., வரை, கோவை கோட்­டத்­தில், ‘வாட்’ வரி­யாக, 24.62 கோடி, வாட் வரி­யில் இல்­லாத பொருட்­க­ளுக்கு, 580.95 கோடி ரூபாய் வரி வசூ­லிக்­கப்­பட்டு உள்­ளது. மேலும், 1,226.98 கோடி ரூபாய், எஸ்.ஜி.எஸ்.டி., வசூ­லா­கி­யுள்­ளது. மொத்­தம், கோவை வணிக வரி கோட்­டத்­தில், 1,832.55 கோடி ரூபாய் வரி வசூ­லிக்­கப்­பட்­டுள்­ளது.


வணிக வரித் துறை அதி­கா­ரி­கள் கூறு­கை­யில், ‘கோவை கோட்­டத்­தில், ஜி.எஸ்.டி.,க்கு முன், ஒரு லட்­சம் வர்த்­த­கர்­களே இருந்­த­னர். தற்­போது, ஜாப் ஒர்க், சேவை துறை­க­ளைச் சார்ந்த, 25 ஆயி­ரம் பேர், புதி­தாக இணைந்­துள்­ள­னர். வர்த்­த­கர் எண்­ணிக்கை அதி­க­ரிப்­பால்,
வரி வசூ­லும் அதி­க­ரித்­துள்­ளது’ என்­ற­னர்.

மூலக்கதை