பிரிமியர் பேட்மின்டன் போட்டி வெற்றியை தவறவிட்ட சிந்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரிமியர் பேட்மின்டன் போட்டி வெற்றியை தவறவிட்ட சிந்து

ஐதராபாத்:  பிரிமியர் பேட்மின்டன் போட்டியில், ஐதராபாத் அணியின் சிந்து ஏமாற்றம் அளித்தார். பிரிமியர் பேட்மின்டன் லீக் போட்டி தொடர் ஐதராபாத்தில் நேற்று நடந்தது.

இதில், சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த போட்டியில், சென்னையின் சின் சங், சுமித் ஜோடி, ஐதராபாத் அணியின் இசாரா, கிம் சா ராங் ஜோடியை எதிர்கொண்டது.

இதில், 13-15, 15-12, 15-10 என்ற கணக்கில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த போட்டியில், சென்னை வீரர் வெய் பெங், லீ ஹியுனிடம் மோதினார். இதில் 11-15, 13-15 என்ற கணக்கில் சென்னை வீரர் தோல்வி அடைந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நட்சத்திர வீராங்கனை பி. வி. சிந்து, சங் ஜி ஹியுன் ஆகியோர் மோதினர்.

முதல் செட்டில் ஹியுன் சிறப்பாக விளையாடி முன்னிலை பெற்றார். சுதாரித்துக்கொண்டு ஆடிய சிந்து 2வது செட்டில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஆட்டத்தில் சிந்து திணறினார். இந்நிலையில், சிறப்பான ஆடத்தை வெளிப்படுத்திய ஹியுன் 7-15 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றார்.

ஆட்டத்தின் முடிவில், 13-15, 15-14, 7-15 என்ற கணக்கில் சிந்து தோல்வி அடைந்தார்.  

.

மூலக்கதை