முதல் டெஸ்ட் இன்று தொடக்கம் பாகிஸ்தான்- தென்னாப்பிரிக்கா பலப்பரிட்சை

தமிழ் முரசு  தமிழ் முரசு
முதல் டெஸ்ட் இன்று தொடக்கம் பாகிஸ்தான் தென்னாப்பிரிக்கா பலப்பரிட்சை

செஞ்சுரியன்: பாகிஸ்தான்-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் இன்று தொடங்குகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

3 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது.   முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது. தென்னாப்பிரிக்க அணி வலுவானது.

மேலும், சொந்த மண்ணில் விளையாடுவதால் கூடுதல் பலத்துடன் களமிறங்குகிறது. கேப்டன் டூ பிளஸ்சிஸ், மார்க்ராம், அம்லா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் அணியில் உள்ளனர்.

ஸ்டெயின், ரபடா, கேஷவ் மகராஜ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசக் கூடியவர்கள். எனவே, பாகிஸ்தான் அணிக்கு பெரும் சவாலாக தென்னாப்பிரிக்கா விளங்கும்.

 சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் நல்ல நிலையில் உள்ளது.   பேட்டிங்கில் பஹார் ஜமான், இமாம் உல்-ஹக், அசார் அலி, ஹாரிஸ் சோகைல், பாபர் அசாம் ஆகியோரும், பந்து வீச்சில் யாசிர் ஷா, ஹசன் அலி, ஷகீன் அப்ரிடி ஆகியோரும் பார்மில்  உள்ளனர்.

இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதால், இன்று தொடங்கும் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். தென்னாப்பிரிக்க மண்ணில் பாகிஸ்தான் அணி இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது.

இதில் 2ல் வெற்றி, 9ல் தோல்வி, ஒரு போட்டியில் டிராவும் கண்டுள்ளது.


.

மூலக்கதை