ஹோப் 146* ரன் விளாசல் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

தினகரன்  தினகரன்
ஹோப் 146* ரன் விளாசல் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

தாக்கா: வங்கதேச அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசியது. வங்கதேசம் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 255 ரன் குவித்தது. தமிம் இக்பால் 50 ரன் (63 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), முஷ்பிகுர் ரகிம் 62 ரன் (80 பந்து, 5 பவுண்டரி), ஷாகிப் அல் ஹசன் 65 ரன் (62 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்),மகமதுல்லா 30 ரன் எடுத்தனர். கேப்டம் மோர்டசா 6 ரன், மெகதி ஹசன் மிராஸ் 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஓஷேன் தாமஸ் 3, ரோச், கீமோ பால், பிஷூ, பாவெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 49.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 256 ரன் எடுத்து வென்றது. ஹேம்ராஜ் 3, டேரன் பிராவோ 27, சாமுவேல்ஸ் 26, ஹெட்மயர் 14, கேப்டன் ரோவ்மன் பாவெல் 1, சேஸ் 9 ரன்னில் வெளியேறினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய ஷாய் ஹோப் சதம் விளாசினார். ஹோப் 146 ரன் (144 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்), கீமோ பால் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹோப் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, கடைசி போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது.

மூலக்கதை