'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்..!

தினமலர்  தினமலர்
லூசிபர் படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்..!

பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், தமிழில் வரும் நல்ல படங்கள் மட்டுமல்லாது, மலையாள திரையுலகில் வெளியாகும் சிறந்த படங்களையும் தொடர்ந்து பாராட்டி வருகிறார். அந்தவகையில் பிருத்விராஜ் முதன்முதலாக இயக்குநராகி இருக்கும் 'லூசிபர்' படத்தை, தான் பார்க்க ஆவலாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மோகன்லால், கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தின் டீசர் இன்று(டிச.,13) காலை வெளியானது. இதனை பிருத்விராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். டீசரை பார்த்த கரண் ஜோஹர், இந்தப்படத்தை பார்க்க ஆவலாக இருப்பதை குறிப்பிடும் விதமாக “இந்தப்படத்தை காண என்னால் காத்திருக்க முடியாது” என டுவீட் செய்துள்ளார்.

மூலக்கதை