இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 71.59

தினமலர்  தினமலர்
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 71.59

மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி இருப்பதாலும், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பதவியேற்றுள்ள சக்திகாந்த தாஸ் தனது முதல் உரையில் அளித்துள்ள வாக்குறுதிகளால் ஏற்பட்ட நம்பிக்கை காரணமாக ரூபாய் மதிப்பு சரிவிலிருந்து மீண்டுள்ளது.

கடந்த சில நாட்களாக சரிவுடன் காணப்பட்ட ரூபாயின் மதிப்பு, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது 42 காசுகள் உயர்ந்து 71.59 ஆக இருந்தது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 72.01 ஆக இருந்தது.

மூலக்கதை