31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சாதனை வெற்றி: அடிலெய்டில் வீழ்ந்தது ஆஸ்திரேலியா

தமிழ் முரசு  தமிழ் முரசு
31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சாதனை வெற்றி: அடிலெய்டில் வீழ்ந்தது ஆஸ்திரேலியா

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி சாதனை ெவற்றியை வசப்படுத்தியுள்ளது. அடிலெய்டில் ஆஸி.

அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆஸி. மண்ணில் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியை, முதன் முறையாக இந்திய அணி ைகப்பற்றி, வரலாறு படைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதில் ஒரு போட்டி மழையால் ரத்தானது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, கடந்த 6ம் தேதி அடிலெய்டில் துவங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் புஜாரா, தனி வீரராக போராடி முதல் இன்னிங்சில் 123 ரன்களை குவித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் இந்திய பவுலர்களின் திறமையான பந்துவீச்சால், ஆஸி.

அணி முதல் இன்னிங்சில் சொந்த மண்ணில் 235 ரன்களில் சுருண்டது. இதனால் முதல் இன்னிங்சில் இந்திய அணி 15 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்சிலும் புஜாரா அசத்தினார்.

அவர் 71 ரன்களை குவிக்க, ரஹானே 70 ரன்கள் எடுத்து கை கொடுத்தார். லோகேஷ் ராகுல் 44 ரன்கள், கேப்டன் கோஹ்லி 34 ரன்கள் மற்றும் பன்ட் 28 ரன்கள் எடுத்து, அணியின் ஸ்கோர் உயர உதவினர்.

இதனால் இந்திய அணி 2வது இன்னிங்சில் 307 ரன்களை குவித்தது. 323 ரன்கள் எடுத்த வெற்றி என்ற நிலையில் 2ம் இன்னிங்சை துவக்கியது ஆஸி.

அணி. அந்த அணியின் ஓபனர் பிஞ்ச் 11 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் விக்கெட் கீப்பர் பன்ட் வசம் பிடிபட்டார்.

ஹாரிஸ் 26 ரன், கவாஜா 8 ரன்னில் ஆட்டமிழந்தனர். .

ஹேண்ட்ஸ்கோம்ப் 14 ரன் எடுத்து ஷமி வேகத்தில் புஜாராவிடம் பிடிபட்டார்.

4ம் நாளான நேற்று ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. ஷான் மார்ஷ் 31 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கைவசம் 6 விக்கெட் இருக்க, வெற்றிக்கு இன்னும் 219 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்று காலை ஆஸி.

அணி ஆட்டத்தை தொடர்ந்தது. முதல் இன்னிங்சில் 72 ரன்களை கொடுத்து, அணியை மீட்ட டிராவிஸ் ஹெட், 2ம் இன்னிங்சில் சோபிக்கவில்லை.

இன்று ஆட்டம் துவங்கிய சற்று நேரத்தில், இஷாந்த் சர்மாவின் அற்புதமான பவுன்சரை, தேவையில்லாமல் அடிக்க முயன்ற அவர், ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து பரிதாபமாக வெளியேறினார். இருபபினும் ஷான் மார்ஷ் மற்றொரு முனையில் சளைக்காமல் போராடினார்.

அரை சதத்தை கடந்த பின்னர் அவர், பும்ரா வீசிய பந்தில், கீப்பர் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து 60 ரன்களில் வெளியேற, இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது.

ஆஸி. கேப்டனும், விக்கெட் கீப்பருமான டிம் பெய்ன், 73 பந்துகளில் 41 ரன்களை குவித்தார்.

அவரும் பும்ராவின் பந்துவீச்சில், கீப்பர் பன்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, 7 விக்கெட் இழந்து 187 ரன்களில் ஆஸ்திரேலியா தள்ளாடியது. மிட்செல் ஸ்டார்க்கும், கம்மின்சும் சேர்ந்து 8வது விக்கெட்டுக்கு 41 ரன்களை குவித்தனர். இதனால் இந்தியாவின் வெற்றி தாமதமானது.

இருவரும் தலா 28 ரன்கள் எடுத்தனர்.   இறுதியில் 119,5 ஓவர்களில் 291 ரன்கள் எடுத்து ஆஸி. அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

புதிய வரலாறு: டெஸ்ட் வரலாற்றில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியை இந்திய அணியின் வீரர்களும், ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

.

மூலக்கதை