சமுத்திர புத்திரன் : தமிழில் வெளிவரும் ஹாலிவுட் படம்

தினமலர்  தினமலர்
சமுத்திர புத்திரன் : தமிழில் வெளிவரும் ஹாலிவுட் படம்

பெரிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாக தயாராகி வந்த அக்குவாமேன் என்கிற படம், கடந்த மாதம் உலகின் சில நாடுகளில் வெளிவந்தது. இந்தியா உள்ளிட்ட மேலும் சில நாடுகளில் வருகிற 14ந் தேதி வெளிவருகிறது. தமிழில் மொழிமாற்றம் செய்து சமுத்திர புத்திரன் என்ற தலைப்பில் என்.வி.ஆர் சினிமா என்ற நிறுவனம் வெளியிடுகிறது. 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டி தொழில்நுட்பத்திலும் வெளிவருகிறது.

உலகில் உள்ள முக்கிய 7 கடல்களை ஆள்கிற மன்னன் ஆர்தர் கரி. இவருக்கு எதிராக அட்லாண்டர்கள் உலகில் உள்ள கடல் அனைத்தையும் கைப்பற்றி தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வர கிளர்ச்சி செய்கிறார்கள். அவர்களிடமிருந்து கடலை ஆர்தர் கரி கடல்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.

தரையில் மனிதர்கள் வசிப்பதுபோன்று கடலுக்குள் வசிக்கும் மனிதர்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனை கதை. 200 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. தி காஞ்சுரிங், அனபெல்லா போன்ற பயங்கர பேய் படங்களை இயக்கிய ஜேம்ஸ் வான் இயக்கி உள்ளார். பைப்லைன், ஜஸ்டிஸ் லீக், தி பேட் பாத் உள்ளிட்ட படங்களில் நடித்த ஜேசன் மொமோவா சமுத்திர புத்திரனாக நடித்துள்ளார். தி ரம் டயரி, ஆங்கிரி ஸ்டோரி, 3 டேய்ஸ் டு கில் படங்களில் நடித்த ஆம்பர் ஹார்ட் ஹீரோயினாக நடித்துள்ளார். படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் பல மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை