ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் மார்ச் வரை, ‘கெடு’ நீட்டிப்பு

தினமலர்  தினமலர்
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் மார்ச் வரை, ‘கெடு’ நீட்டிப்பு

புதுடில்லி:கடந்த, 2017- – 18ம் நிதியாண்டின் விற்பனை, கொள்முதல், உள்ளீட்டு வரிச் சலுகை உள்ளிட்ட விபரங்களுடன், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்வதற்கான, ‘கெடு’, 2019, மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மத்தியமறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜி.எஸ்.டி.ஆர்.,–9, ஜி.எஸ்.டி.ஆர்.,9ஏ., மற்றும் ஜி.எஸ்.டி.ஆர்.,-9சி., கணக்கு தாக்கல் செய்வதற்கு, 31ம் தேதி இறுதி நாள் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்குமாறு, தொழில் கூட்டமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அதை ஏற்று, கடந்த நிதியாண்டின் கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம், 2019, மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான படிவங்கள், விரைவில், ஜி.எஸ்.டி.என்., வலை தளத்தில் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை, தொழில் கூட்டமைப்புகள் வரவேற்றுள்ளன.

இது குறித்து, எர்னஸ்ட் யங் நிறுவனத்தின் வரிப் பிரிவு பங்குதாரர், அபிஷேக் ஜெயின் கூறுகையில், ‘‘கணக்கு தாக்கல் செய்வதற்கு அவகாசம் குறைவாக இருந்ததால், சிரமப்பட்ட தொழில் துறையினருக்கு, இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கும்,’’ என்றார்.

மூலக்கதை