கட்டுமான துறையில் 2.50 லட்சம் வேலைவாய்ப்பு:ஆளில்லா குட்டி விமானம் இயக்குவோருக்கு அதிர்ஷ்டம்

தினமலர்  தினமலர்
கட்டுமான துறையில் 2.50 லட்சம் வேலைவாய்ப்பு:ஆளில்லா குட்டி விமானம் இயக்குவோருக்கு அதிர்ஷ்டம்

மும்பை:வரும் ஆண்டுகளில், கட்டுமான துறையில் மட்டும், ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானத்தை இயக்க, 2.50 லட்சம் பேர் தேவைப்படுவர் என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

டிரோன் குறித்து, இ.சி.ஐ., – பி.டபிள்யு.சி., நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:வரும் ஆண்டுகளில், நெடுஞ்சாலை, மேம்பாலம், குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளின் ஒவ்வொரு கட்டத்திலும், டிரோன்களின் பயன்பாடு இன்றியமையாததாக இருக்கும்.உலகளவில், கட்டுமான துறை வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.

அதனால், இத்துறையில்வர்த்தக ரீதியிலான டிரோன்களின் தேவையும் அதிகமாக இருக்கும்.இது, டிரோன்களை இயக்குவோருக்கான வேலைவாய்ப்பு பெருகவும் வழி வகுக்கும். வரும் ஆண்டுகளில், இத்துறையில், 2.50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.தற்போது, கட்டுமான வடிவமைப்பை திட்டமிடுவது, பணிகளை பார்வையிடுவது, பாதுகாப்பு அம்சங்களை ஆராய்வது, முப்பரிமாண வரைபடங்களை தயாரிப்பது உள்ளிட்டவற்றுக்கு, டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால், கட்டுமான நிறுவனங்கள், அவசியமற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள முடிகிறது.கட்டுமான பகுதியின் பாதுகாப்பை, ஆட்கள் மூலம் கண்காணிப்பதை விட, டிரோன்கள் மூலம், உட்கார்ந்த இடத்தில் இருந்தே பார்க்க முடிவதால், திட்டச் செலவும் குறைகிறது.அதனால், கட்டுமான துறையில், பணியிடங்களில் டிரோன்களின் பயன்பாடு, 239 சதவீதம் உயர்ந்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில், டிரோன் சந்தை. 6,230 கோடி ரூபாயாக உயரும். இது, ஒட்டுமொத்த பொருளாதாரத்தில், டிரோன்களின் பயன்பாடு அதிகரிக்கும் சூழலில், பல மடங்கு உயரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பெருகும் பயன்பாடுதரை கட்டுப்பாடு சாதனம் மூலம் இயக்கப்படும், ஆளில்லா விமானங்களின் பயன்பாடு, வேகமாக அதிகரித்து வருகிறது. கனிம வள ஆய்வு, கட்டுமானம், திரைப்படம், திருமண விழா போன்றவற்றில் டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மூலக்கதை