களத்திற்கு வாங்க : கமல் அழைப்பு

தினமலர்  தினமலர்
களத்திற்கு வாங்க : கமல் அழைப்பு

இதுநாள் வரை சினிமா கலைஞனாக இருந்து வந்த கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சி துவங்கி அரசியல் பயணத்தை துவங்கிவிட்டார். விரைவில் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் கமல் தன் டுவிட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், "நீங்கள் தமிழ்நாட்டில் சந்தோஷமாக நிம்மதியாக இருக்கிறீர்கள் என்றால் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம். நாட்டு நடப்பும், அரசியலும் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது என்று நம்பினால் இந்த வீடியோ உங்களுக்காக எடுக்கப்பட்டது அல்ல புறப்படுங்க என்று கூறிவிட்டு சில நொடிகள் தன் கடிகாரத்தை பார்க்கிறார். பின்னர் வாவ் இன்னும் இருக்கிறீர்களா, அப்படியென்றால் நீங்கள் நம்ம கட்சி, அங்க என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், களத்திற்கு வாங்க என்று மய்யம் கட்சியில் இணைய அழைத்துள்ளார்.

43 விநாடிகள் ஓடும் கமலின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.

மூலக்கதை