வதந்திகளை நம்ப வேண்டாம் : நாக சைதன்யா

தினமலர்  தினமலர்
வதந்திகளை நம்ப வேண்டாம் : நாக சைதன்யா

யுத்தம் சரணம் படத்தை அடுத்து ஷாவ்யாஷச்சி, சைலஜா ரெட்டி அல்லுடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நாக சைதன்யா. இந்த படங்களில் நடித்து வரும்போது மேலும் சில படங்களில் நடிக்க நாக சைதன்யா தயாராகி விட்டதாக டோலிவுட்டில் செய்தி பரவியுள்ளது.
ஆனால் இந்த செய்தியை மறுத்து நாகசைதன்யா ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதாவது, தற்போது நான் ஷாவ்யாஷச்சி, சைலஜா ரெட்டி அல்லுடு படங்களில் தான் நடித்து வருகிறேன். இதன்பிறகு நடிக்கப்போகும் படத்தைப்பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதனால் எனது புதிய படங்கள் குறித்து நானாக அறிவிக்கும் வரை வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் நாக சைதன்யா.

மூலக்கதை