வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்!

PARIS TAMIL  PARIS TAMIL
வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்!

சுமார் 4 ஆயிரம் இலங்கை பணியாளர்கள் மீண்டும் இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.
 
சட்டவிரோதமாக குவைட்டில் தங்கியிருந்த இலங்கையர்களே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேளைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
 
கடந்த ஜனவரி 29 ஆம் திகதி முதல் பெப்ரவரி 22 ஆம் திகதிவரையான காலப்பகுதியை குவைட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு தண்டனையின்றி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
குவைட்டில் 15 ஆயிரத்து 447 பேர் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் தலதா அத்துகோரலே குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் குவைட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்களை, நாட்டுக்கு அழைத்துவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிநாட்டு வேளைவாய்ப்பு பணியக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை