ஜோதிகாவின் ‘நாச்சியார்; ஓப்பனிங் வசூல் விபரம்

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
ஜோதிகாவின் ‘நாச்சியார்; ஓப்பனிங் வசூல் விபரம்

கடந்த வெள்ளியன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த பாலாவின் ‘நாச்சியார்’ திரைப்படம் பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சங்னகள் பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது.

வாரயிறுதி நாட்களான சனி, ஞாயிறு தினங்களில் குடும்ப ஆடியன்ஸ்கள் திரையரங்குகளுக்கு அதிகம் வந்து இந்த படத்தை பார்த்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இந்த படம் 20 திரையரங்க வளாகங்களில் 213 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,02,04,781 வசூல் செய்துள்ளது.

மேலும் திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் இருந்ததே இந்த படத்தின் அபாரமான வசூலுக்கு சான்றாக உள்ளது.

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவ்ந்துள்ள படம் ஒன்று சென்னையில் வாரயிறுதி வசூலாக ரூ.1 கோடிக்கும் அதிகமாக பெற்றுள்ளதே இந்த படத்தின் வெற்றிக்கு சான்றாகும்.

இந்த வசூல் மேலும் பல நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் உருவாகுவதற்கு ஒரு நல்ல ஊக்குவிப்பை அளித்துள்ளது என்றால் அது மிகையாகாது

மூலக்கதை