செலிபிரிட்டி பேட்மின்டன் லீக்: சென்னை ராக்கர்சுக்கு விஷ்ணு விஷால் கேப்டன்

தினகரன்  தினகரன்

சென்னை: செலிபிரிட்டி பேட்மின்டன் லீக் தொடருக்கான சென்னை ராக்கர்ஸ் அணியின் கேப்டனாக நடிகர் விஷ்ணு விஷால், ஊக்குவிப்பாளராக நடிகை வரலட்சுமி,  விளம்பர தூதராக நடிகை ஹன்சிகா நியமிக்கப்பட்டுள்ளனர். தென் இந்திய திரைப்பட நடிகர், நடிகைகள்  பங்கேற்கும் சிபிஎல்  2வது சீசன் நேரு உள் விளையாட்டு அரங்கில்  பிப்ரவரி 25ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ் நடிகர், நடிகைகள் சென்னை ராக்கர்ஸ் அணியிலும், மலையாள நடிகர், நடிகைகள் கேரளா ராயல்ஸ் அணியிலும், தெலுங்கு நடிகர், நடிகைகள் டோலிவுட் தண்டர்ஸ் அணியிலும், கன்னட நடிகர், நடிகைகள் கர்நாடகா வாரியர்ஸ் அணியிலும் விளையாட உள்ளனர்.இந்நிலையில், சென்னை ராக்கர்ஸ் அணி வீரர், வீராங்கனைகள் நேற்று அறிவிக்கப்பட்டனர். கேப்டனாக விஷ்ணு விஷால், துணை கேப்டனாக கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களுடன்  விக்ராந்த், கலையரசன், ஹரீஷ் கல்யாண் மற்றும் நடிகைகள் காயத்ரி, சுஜா வருணி, ஜனனி ஐயர், மிஷா கோஷல் ஆகியோர் விளையாட உள்ளனர்.ஊக்குவிப்பாளராக  நடிகை வரலட்சுமியும், விளம்பர தூதராக நடிகை ஹன்சிகாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அணி உரிமையாளரும், கோகுலம் பைனான்ஸ் குழும நிர்வாகியுமான பைஜு கோபாலன் இதனை அறிவித்தார். சீருடை, லோகோவும் அறிமுகப்படுத்தப்பட்டன.

மூலக்கதை