நில விற்பனையில் ‘பிளாக் செயின்’ தொழில்நுட்பம்

தினமலர்  தினமலர்
நில விற்பனையில் ‘பிளாக் செயின்’ தொழில்நுட்பம்

புதுடில்லி : வலை­த­ளங்­களில், ‘பிட்­கா­யின்’ போன்ற மெய்­நி­கர் கரன்சி பரி­வர்த்­த­னைக்கு, ‘பிளாக் செயின்’ தொழில்­நுட்­பம் பயன்­ப­டு­கிறது.

இதில், எண்­ணற்ற கணினி ஒருங்­கி­ணைப்­பு­கள் வாயி­லாக, மின்­னணு கணக்கு புத்­த­கம் பரி­மா­றிக் கொள்­ளப்­ப­டு­கிறது. அதா­வது, எந்­த­வொரு பரி­வர்த்­தனை விப­ர­மும், மையத் தொகுப்­பில் சேக­ரிக்­கப்­பட்டு, வினி­யோ­கிக்­கப்­ப­டு­வ­தில்லை.
பரி­வர்த்­தனை விப­ரங்கள், ஒட்­டு­மொத்த கணினி ஒருங்­கி­ணைப்­பிற்கு இடையே தான் நடக்­கின்றன.இதன் கார­ண­மாக, கணினி நாச­கா­ரர்­கள், கணினி மையத் தொகுப்­பில் புகுந்து, தக­வல்­களை திரு­டும் வாய்ப்பு குறைவு.

‘‘அத­னால், பாது­காப்­பான பிளாக் செயின் தொழில்­நுட்­பத்தை, இணை­யம் சார்ந்த நில பத்­தி­ரப்­ப­திவு, மருத்­துவ ஆவ­ணங்­கள் ஆகி­ய­வற்­றில் பயன்­ப­டுத்­து­வது தொடர்­பாக, ‘நிடி ஆயோக்’ பரி­சீ­லிக்­கிறது,’’ என, ‘நிடி ஆயோக்’ தலைமை செயல் அதி­கா­ரி­யின் சிறப்பு அதி­காரி, ஆலேக் ஷரன் தெரி­வித்து உள்­ளார்.

‘‘பத்­தி­ரப்­ப­திவு திட்­டத்­தி­லும், நில உரி­மைக்­கான ஆவண பரா­ம­ரிப்­பிற்­கும் உள்ள இடை­வெளி தான், நில மோச­டிக்கு வித்­தி­டு­கிறது. இதற்கு, பிளாக் செயின் முற்­றுப்­புள்ளி வைக்­கும்,’’ என, ஆலோக் ஷரன் கூறி­னார்.

மூலக்கதை