சவரன் ரூ.23,600 ஐ நெருங்குகிறது தங்கம் விலை

தினமலர்  தினமலர்
சவரன் ரூ.23,600 ஐ நெருங்குகிறது தங்கம் விலை

சென்னை : கடந்த 2 நாட்களாக உயர்வுடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்றும் (பிப்.,17) உயர்வுடனேயே காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 ம், கிராமுக்கு ரூ.9 ம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.23,600 ஐ நெருங்கி வருகிறது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2949 ஆகவும், 10 கிராம் (24 காரட் தங்கத்தின் விலை ரூ.31,530 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23,592 க்கு விற்பனையாகிறது. அதே சமயம், ஒரு கிராம் வெள்ளி விலை 20 காசுகள் குறைந்து ரூ.41.70 ஆக உள்ளது.

மூலக்கதை