தொடர்ச்சியாக 4வது அரை சதம்: மித்தாலி ராஜ் சாதனையில் இந்தியாவுக்கு 2வது வெற்றி

தினகரன்  தினகரன்

ஈஸ்ட் லண்டன்: தென் ஆப்ரிக்க மகளிர் அணியுடனான 2வது டி20 போட்டியில், இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. மித்தாலி ராஜ் தொடர்ச்சியாக 4வது அரை சதம் விளாசி மகளிர் டி20ல் உலக சாதனை படைத்தார்.பபலோ பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன் குவித்தது. லுவஸ் 33, டி கிளெர்க் 26, லீ, கேப்டன் நியகெர்க், டிரையன் தலா 15, ஷப்னிம் 16* ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் பூனம் யாதவ், அனுஜா பட்டீல் தலா 2, ஷிகா பாண்டே, வஸ்த்ராகர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய இந்தியா 19.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து வென்றது. தொடக்க வீராங்கனைகள் கேப்டன் மித்தாலி ராஜ் - ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.1 ஓவரில் 106 ரன் சேர்த்தது. மந்தனா 57 ரன் (42 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். மித்தாலி 76 ரன் (61 பந்து, 8 பவுண்டரி), கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது. தொடர்ச்சியாக 4வது அரை சதம் விளாசிய மித்தாலி (62, 73*, 54*, 76*), மகளிர் டி20ல் உலக சாதனை படைத்தார். மித்தாலி எடுத்த 76 ரன், சர்வதேச டி20ல் அவரது அதிகபட்ச ஸ்கோராகவும் அமைந்தது.

மூலக்கதை