எச்சரிக்கை! - இந்தவார விடுமுறையில் நெரிசலுக்குள்ளாகும் வீதிகள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
எச்சரிக்கை!  இந்தவார விடுமுறையில் நெரிசலுக்குள்ளாகும் வீதிகள்!!

இன்று வெள்ளிக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை இல்-து-பிரான்சுக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, நாளை சனிக்கிழமை Auvergne-Rhône-Alpes மாகாணத்துக்கு கறுப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 
 
பிரான்சின் வீதி கண்காணிப்பாளர்கள் Bison Futé வெளியிட்டுள்ள தகவலின் படி, இன்று வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் பச்சை நிற எச்சரிக்கையும், நாளை சனிக்கிழமை நாடு முழுவதும் செம்மஞ்சள் எச்சரிக்கையும், Auvergne-Rhône-Alpes மாகாணத்துக்கு மட்டும் கறுப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது வெளிச்செல்லும் வீதிகளுக்கானது மட்டுமே. 
 
பரிஸ் , Bordeaux, Lyon மற்றும் Grenoble ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்கள் 16.00 மணியில் இருந்து 23.00 மணிவரை பணிப்பதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதேவேளை, நாளை சனிக்கிழமை காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணிவரை நாடுமுழுவதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
 
 
 
 

மூலக்கதை