லிபியாவின் புதிய ஜனாதிபதியை சந்திக்கும் இம்மானுவல் மக்ரோன்!!

PARIS TAMIL  PARIS TAMIL
லிபியாவின் புதிய ஜனாதிபதியை சந்திக்கும் இம்மானுவல் மக்ரோன்!!

லிபியாவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள George Weahஐ, எலிசே மாளிகையில் வைத்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சந்திக்கின்றார். 
 
உதைப்பந்தாட்ட வீரராக இருந்து, பின்னர் அரசியலில் ஈடுபட்டு லிபியா நாட்டின் ஜனாதிபதி ஆகியுள்ள George Weahக்கு ஜனாதிபதியாக இது ஐரோப்பிய நாடு ஒன்றுக்கான முதல் சுற்றுப்பயணம். வரும் புதன்கிழமை, பெப்ரவரி 21 ஆம் திகதி பிரான்ஸ் வரும் இவரை, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் ஆகியோர் வரவேற்கின்றனர். 
 
லிபியா நாட்டுக்கான பொருளாதார வளர்ச்சிக்காக பிரான்சிடம் உதவிகளை பெற இந்த சந்திப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கபட்டுள்ளது.

மூலக்கதை