51 நாள் ஐபிஎல் சீசன்-11 திருவிழா : போட்டி அட்டவணை வெளியீடு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: ஐபிஎல் சீசன்-11 டி20 தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 9 இடங்களில் 51 நாட்களுக்கு 60 போட்டிகள் நடக்க உள்ளன. மும்பை வாங்கடே மைதானத்தில் ஏப்ரல் 7ம் தேதி, முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் சீசன்-11 டி20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப்  ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.ஏப்ரல் 7ம் தேதி, மும்பை வாங்கடே மைதானத்தில் துவக்க விழாவுடன், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. 2 ஆண்டு தடை முடிந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் மகேந்திர சிங் டோனி தலைமையில் களமிறங்குவதால் இத்தொடர் சென்னை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் 7 போட்டிகள் நடக்க உள்ளன.56 லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் குவாலிபயர்-1 சுற்றிலும், அடுத்த 2 அணிகள் எலிமினேட்டர் சுற்றிலும் மோதும். குவாலிபயர்-1 சுற்றில் வென்ற அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடைந்த அணி, எலிமினேட்டர் சுற்றில் வென்ற அணியுடன் குவாலிபயர்-2 சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குள் நுழையும். குவாலிபயர்-2, எலிமினேட்டர் சுற்றுக்கான போட்டி இடம் இன்னும் முடிவாகவில்லை.  மே 27ம் தேதி இறுதிப் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நடக்கிறது.முழு அட்டவணைதேதி    போட்டி            இடம்    நேரம்ஏப்.7    சிஎஸ்கே-மும்பை        மும்பை    இரவு 8.00ஏப்.8    டெல்லி-பஞ்சாப்        டெல்லி    மாலை 4.00ஏப்.8    கொல்கத்தா-பெங்களூர்        கொல்கத்தா    இரவு 8.00ஏப்.9    சன்ரைசர்ஸ்-ராஜஸ்தான்        ஐதராபாத்    இரவு 8.00ஏப்.10    சிஎஸ்கே - கொல்கத்தா        சென்னை    இரவு 8.00ஏப்.11    ராஜஸ்தான் - டெல்லி        ஜெய்ப்பூர்    இரவு 8.00ஏப்.12    சன்ரைசர்ஸ் - மும்பை        ஐதராபாத்    இரவு 8.00ஏப்.13    பெங்களூர் - பஞ்சாப்        பெங்களூரு    இரவு 8.00ஏப்.14    மும்பை - டெல்லி        மும்பை    மாலை 4.00ஏப்.14    கொல்கத்தா - சன்ரைசர்ஸ்    கொல்கத்தா    இரவு 8.00ஏப்.15    பெங்களூர் - ராஜஸ்தான்        பெங்களூரூ    மாலை 4.00ஏப்.15    பஞ்சாப் - சிஎஸ்கே        இந்தூர்    இரவு 8.00ஏப்.16    கொல்கத்தா - டெல்லி        கொல்கத்தா    இரவு 8.00ஏப்.17    மும்பை - பெங்களூர்        மும்பை    இரவு 8.00     ஏப்.18    ராஜஸ்தான் - கொல்கத்தா    ஜெய்ப்பூர்    இரவு 8.00ஏப்.19    பஞ்சாப் - சன்ரைசர்ஸ்        இந்தூர்    இரவு 8.00ஏப்.20    சிஎஸ்கே - ராஜஸ்தான்        சென்னை    இரவு 8.00ஏப்.21    கொல்கத்தா - பஞ்சாப்        கொல்கத்தா    மாலை 4.00ஏப்.21     டெல்லி - பெங்களூர்        டெல்லி    இரவு 8.00ஏப்.22    சன்ரைசர்ஸ் - சிஎஸ்கே        ஐதராபாத்    மாலை 4.00ஏப்.22    ராஜஸ்தான் - மும்பை        ஜெய்ப்பூர்    இரவு 8.00ஏப்.23    பஞ்சாப் - டெல்லி        இந்தூர்    இரவு 8.00ஏப்.24    மும்பை - சன்ரைசர்ஸ்        மும்பை    இரவு 8.00ஏப்.25    பெங்களூர் - சிஎஸ்கே        பெங்களூரு    இரவு 8.00ஏப்.26    சன்ரைசர்ஸ் - பஞ்சாப்        ஐதராபாத்    இரவு 8.00ஏப்.27    டெல்லி - கொல்கத்தா        டெல்லி    இரவு 8.00ஏப்.28    சிஎஸ்கே - மும்பை        சென்னை    இரவு 8.00ஏப்.29    ராஜஸ்தான் - சன்ரைசர்ஸ்    ஜெய்ப்பூர்    மாலை 4.00ஏப்.29    பெங்களூர் - கொல்கத்தா        பெங்களூரு    இரவு 8.00ஏப்.30    சிஎஸ்கே - டெல்லி        சென்னை    இரவு 8.00மே 1    பெங்களூர் - மும்பை        பெங்களூரு    இரவு 8.00மே 2    டெல்லி - ராஜஸ்தான்        டெல்லி    இரவு 8.00மே 3    கொல்கத்தா - சிஎஸ்கே        கொல்கத்தா    இரவு 8.00மே 4    பஞ்சாப் - மும்பை        மொகாலி    இரவு 8.00மே 5    சிஎஸ்கே - பெங்களூர்        சென்னை    மாலை 4.00மே 5    சன்ரைசர்ஸ் - டெல்லி        ஐதராபாத்    இரவு 8.00மே 6    மும்பை - கொல்கத்தா        மும்பை    மாலை 4.00மே 6    பஞ்சாப் - ராஜஸ்தான்        மொகாலி    இரவு 8.00மே 7    சன்ரைசர்ஸ் - பெங்களூர்    ஐதராபாத்    இரவு 8.00மே 8    ராஜஸ்தான் - பஞ்சாப்        ஜெய்ப்பூர்    இரவு 8.00மே 9    கொல்கத்தா - மும்பை        கொல்கத்தா    இரவு 8.00மே 10    டெல்லி - சன்ரைசர்ஸ்        டெல்லி    இரவு 8.00மே 11    ராஜஸ்தான் - சிஎஸ்கே        ஜெய்ப்பூர்    இரவு 8.00மே 12    பஞ்சாப் - கொல்கத்தா        மொகாலி    மாலை 4.00மே 12    பெங்களூர் - டெல்லி        பெங்களூரு    இரவு 8.00மே 13    சிஎஸ்கே - சன்ரைசர்ஸ்        சென்னை    மாலை 4.00மே 13    மும்பை - ராஜஸ்தான்        மும்பை    இரவு 8.00மே 14    பஞ்சாப் - பெங்களூர்        மொகாலி    இரவு 8.00மே 15    கொல்கத்தா - ராஜஸ்தான்    கொல்கத்தா    இரவு 8.00மே 16    மும்பை - பஞ்சாப்        மும்பை    இரவு 8.00மே 17    பெங்களூர் - சன்ரைசர்ஸ்    பெங்களூரு    இரவு 8.00மே 18    டெல்லி - சிஎஸ்கே        டெல்லி    இரவு 8.00மே 19    ராஜஸ்தான் - பெங்களூர்        ஜெய்ப்பூர்    மாலை 4.00மே 19    சன்ரைசர்ஸ் - கொல்கத்தா    ஐதராபாத்    இரவு 8.00மே 20    டெல்லி - மும்பை        டெல்லி    மாலை 4.00மே 20    சிஎஸ்கே - பஞ்சாப்        சென்னை    இரவு 8.00மே 22    குவாலிபயர் -1        மும்பை    இரவு 8.00மே 23    எலிமினேட்டர்            இரவு 8.00மே 25    குவாலிபயர் -2            இரவு 8.00மே 27    இறுதிப்போட்டி        மும்பை    இரவு 8.00

மூலக்கதை