வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களோடு இரண்டரை மணிநேரங்கள் செலவழித்த ஜனாதிபதி!!

PARIS TAMIL  PARIS TAMIL
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களோடு இரண்டரை மணிநேரங்கள் செலவழித்த ஜனாதிபதி!!

ஜனாதிபதி இம்மனுவல் மக்ரோன், நேற்று புதன்கிழமை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். 
 
Villeneuve-Saint-Georges,  (Val-de-Marne) க்குச் சென்ற மக்ரோன், அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உரையாடினார். இரண்டரை மணிநேரங்கள் அவர்களுடன் செலவிட்டார். சிறிய கடைகள் வைத்திருக்கும் சிறு முதலாளிகள் கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்துவிட்டதாக மக்ரோனிடம் குறிப்பிட்டனர். அறுபது வயதுடைய நபர் ஒருவர் தெரிவிக்கும் போது, 'நான் அனைத்தையும் இழந்துவிட்டேன்!' என குறிப்பிட்டார்.  மேலும் ஒரு பெண்மணி மக்ரோனின் கையை பற்றிக்கொண்டு அழுதார். 'எனக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். ஆனால் நாங்கள் ஒரு உணவகத்தில் தங்குகிறோம்!' என அவர் குறிப்பிட்டார். 
 
தொடர்ச்சியாக, மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்த வெள்ளத்தினால் அப்பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. மக்ரோன் குறிப்பிடும் போது,  'வாழ்வாதாரங்களை இழந்த அனைத்து சிறு முதலாளிகளுக்கும்.. மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் துரித கதியில் வாழ்க்கை சீரமைக்கப்படும். அரசு விரைவில் அவர்களுக்காக தேவையை பூர்த்தி செய்யும்!' என குறிப்பிட்டார்.

மூலக்கதை