சீனாவில் வசூலை குவிக்கும் அமீர்கானின் சீக்ரெட் சூப்பர் ஸ்டார்

தினமலர்  தினமலர்
சீனாவில் வசூலை குவிக்கும் அமீர்கானின் சீக்ரெட் சூப்பர் ஸ்டார்

அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியான இந்தி படம் சீக்ரெட் சூப்பர் ஸ்டார். இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் நல்ல வசூலை குவித்த இந்த படத்தின் சீனப்பதிப்பு கடந்த ஜனவரி 19-ந்தேதி வெளியிடப்பட்டது. முதல்நாளே 6.2 மில்லியன் வசூலித்துள்ளது. அதாவது இந்தியாவின் முதல்நாள் வசூலை விட 7 மடங்கு சீனாவில் அதிகமாக வசூலித்துள்ளது.

அந்த வகையில், ஒரு வாரத்தில் 27 முதல் 30 மில்லியன் வரை சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படம் வசூலிக்கும். அதோடு, சீனாவில் மொத்த வசூலாக 200 டாலர்களை வசூலிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தங்கல் படம், சீனாவில் 1, 200 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை