‘நிறுவன செயல்பாடுகளை மக்கள் கவனிக்கின்றனர்’

தினமலர்  தினமலர்
‘நிறுவன செயல்பாடுகளை மக்கள் கவனிக்கின்றனர்’

புதுடில்லி : ‘‘வலை­த­ளங்­களில், பல்­வேறு தக­வல்­களை அறிந்து கொள்­ளும் வச­தி­யால், மக்­கள், நிறு­வ­னங்­களின் செயல்­பா­டு­களை அறி­ய­வும், தவ­று­களை கண்­டு­பி­டிக்­க­வும் வாய்ப்பு கிட்­டி­யுள்­ளது,’’ என, மத்­திய நிதி மற்­றும் கார்ப்­ப­ரேட் விவ­கா­ரங்­கள் துறை அமைச்­சர், அருண் ஜெட்லி தெரி­வித்து உள்­ளார்.

மத்­திய கார்ப்­ப­ரேட் விவ­கா­ரங்­கள் அமைச்­ச­கம், தேசிய நிறு­வ­னங்­களின் சமூக பெறுப்­பு­ணர்வு செயல்­பா­டு­கள் மற்­றும் தக­வல்­க­ளுக்கு என, இரு வலை­த­ளங்­களை உரு­வாக்கி உள்­ளது.

இந்த வலை­த­ளங்­களை, அருண் ஜெட்லி துவக்கி வைத்து பேசி­ய­தா­வது: வலை­தள வச­தி­யால், ஒரு நிறு­வ­னம் குறித்த முழு­மை­யான தக­வல்­களை அறி­ய­வும், செயல்­பா­டு­களில் தவறு இருந்­தால், அதை வெளிப்­ப­டுத்­த­வும் முடி­கிறது. போலி நிறு­வ­னங்­கள் மூலம் நடை­பெ­றும் பணப் பரி­வர்த்­த­னை­களும் தெரிய வரு­கின்றன. ஆகவே, இந்த வெளிப்­ப­டை­யான செயல்­பா­டு­கள், இந்­திய நிறு­வன துறைக்கு நல்­லது. ஒரு நிறு­வ­னம் எந்த அள­விற்கு வெளிப்­ப­டை­யாக தக­வல்­களை வெளி­யி­டு­கி­றதோ, அந்த அள­விற்கு அது, மக்­க­ளுக்­கும் நன்மை பயக்­கும்.

நிறு­வ­னங்­களின், சமூக பொறுப்­பு­ணர்வு செயல்­பா­டு­கள் குறித்த அனைத்து விப­ரங்­க­ளை­யும், மக்­கள் அறிய, நிறு­வன விவ­கா­ரங்­கள் துறை­யின் வலை­த­ளம் உத­வும். நிறு­வ­னங்­கள் சட்­டத்­தில், மூன்று ஆண்­டு­கள் நிகர லாபம் ஈட்­டிய நிறு­வ­னங்­கள், அவற்­றின் லாபத்­தில், 2 சத­வீ­தத்தை, சமூக நற்­கா­ரி­யங்­க­ளுக்கு செல­விட வேண்­டும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

சிறப்பான வளர்ச்சி:
கடந்த, 2014 – 15ம் நிதி­யாண்­டில், 5,870 நிறு­வ­னங்­கள், மருத்­து­வ­மனை, பள்­ளி­கள், அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­கள் உட்­பட, சமூக பொறுப்­பு­ணர்வு செயல்­பா­டு­க­ளுக்கு, 9,554 கோடி ரூபாய் செல­விட்­டுள்ளன. இது, 2015 – 16ல், 7,983 நிறு­வ­னங்­கள் மற்­றும் 13,625 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.

மூலக்கதை