வங்கிகளுக்கு மறு பங்கு மூலதனம் கடன் பத்திர முதிர்வு காலம் மாறுபடும்

தினமலர்  தினமலர்
வங்கிகளுக்கு மறு பங்கு மூலதனம் கடன் பத்திர முதிர்வு காலம் மாறுபடும்

புதுடில்லி : மத்­திய அரசு, பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு, மறு பங்கு மூல­தன திட்­டம் மூலம், 2.11 லட்­சம் கோடி ரூபாய் நிதி­யு­தவி வழங்க உள்­ளது.இதில், 1.35 லட்­சம் கோடி ரூபாய் மதிப்­பிற்கு, கடன் பத்­தி­ரங்­கள் வெளி­யி­டப்­படும்.

இவற்றை, மாறு­பட்ட முதிர்வு காலத்­தில் வெளி­யிட, மத்­திய அரசு திட்­ட­மிட்டு உள்­ளது. இத­னால், முதிர்வு காலத்­தில் ஒரே கட்­ட­மாக, மொத்த தொகையை வழங்­கும் நெருக்­கடி ஏற்­ப­டாது என, மத்­திய அரசு கரு­து­கிறது.

இது குறித்து, மத்­திய நிதி­ய­மைச்­சக அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: கடந்த, 1993 – 94ம் நிதி­யாண்­டில், வங்­கி­க­ளுக்­கான மறு­பங்கு மூல­தன திட்­டத்­தில், ஒரே முதிர்வு கால கடன் பத்­தி­ரங்­கள் வெளி­யிட்டு, 5,700 கோடி ரூபாய் திரட்­டப்­பட்­டது. அதன்­பின், 2006 – 07ல், இந்த கடன் பத்­தி­ரங்­கள், வங்­கி­களின் கட்­டாய முத­லீட்டு பிரி­விற்கு மாற்­றப்­பட்டு, அவற்­றின் மீது வர்த்­த­கம் நடை­பெற்­றது.

இம்­முறை, வெவ்­வேறு முதிர்வு காலம் கொண்ட கடன் பத்­தி­ரங்­கள் வெளி­யி­டப்­படும். இவற்­றில், கட்­டாய முத­லீட்டு அந்­தஸ்து கிடை­யாது என்­ப­து­டன், வர்த்­த­க­மும் மேற்­கொள்ள முடி­யாது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை