‘நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 லட்சம் கோடி டாலராக உயரும்’

தினமலர்  தினமலர்
‘நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 லட்சம் கோடி டாலராக உயரும்’

புதுடில்லி : ‘‘அடுத்த, 8 – 9 ஆண்­டு­களில், நாட்­டின் பொரு­ளா­தா­ரம், 5 லட்­சம் கோடி டால­ராக வளர்ச்சி காணும்,’’ என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­சர், சுரேஷ் பிரபு தெரி­வித்து உள்­ளார்.

டில்­லி­யில், இணைய நிறு­வ­னங்­களின் கூட்­ட­மைப்­பான, ஐ.ஏ.எம்.ஏ.ஐ., நிகழ்ச்­சி­யில், அமைச்­சர் சுரேஷ் பிரபு பேசி­ய­தா­வது: தயா­ரிப்­புத் துறை மட்­டும், முழு­மை­யாக, ‘டிஜிட்­டல்’ மய­மா­னால், தொழில்­நுட்ப நிறு­வ­னங்­க­ளுக்கு, மிகப்­பெ­ரிய அள­வில் வர்த்­தக வாய்ப்­பு­கள் கிட்­டும். அனைத்து துறை­க­ளி­லும், தயா­ரிப்­பு­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான ஆலோ­ச­னை­களை வழங்­கும் பணி­யில், வல்­லு­னர்­கள் ஈடு­பட்­டுள்­ள­னர். அடுத்த, 8 – 9 ஆண்­டு­ களில், இந்­தி­யா­வின் பொரு­ளா­தா­ரம், 5 லட்­சம் கோடி டால­ராக உய­ரும். அதில், தயா­ரிப்­புத் துறை­யின் பங்கு மட்­டும், 20 சத­வீ­த­மாக இருக்­கும்.

அத­னால், தயா­ரிப்­புத் துறை வளர்ச்­சிக்கு முழு­மை­யான செயல் ­திட்­டத்தை உரு­வாக்­கும் பணி மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது. மதிப்­பீட்டு காலத்­தில், மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில், சேவை­கள் பிரி­வின் பங்கு, 60 சத­வீ­த­மாக இருக்­கும். தயா­ரிப்பு மற்­றும் சேவை துறை­க­ளிள் சர்­வ­தேச வர்த்­த­கத்தை, 2 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்த்­த­வும், நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை