பங்கு சந்தைகளில் புதிய உச்சம்: ‘சென்செக்ஸ்’ 35,000ஐ கடந்தது

தினமலர்  தினமலர்
பங்கு சந்தைகளில் புதிய உச்சம்: ‘சென்செக்ஸ்’ 35,000ஐ கடந்தது

மும்பை : மும்பை பங்­குச் சந்­தை­யின், ‘சென்­செக்ஸ்’ குறி­யீடு, நேற்று முதன்­மு­றை­யாக, 35 ஆயி­ரம் புள்­ளி­களை கடந்­தது.

தேசிய பங்­குச் சந்­தை­யின், ‘நிப்டி’ குறி­யீடு, வர்த்­த­கத்­தின் இடையே, முதன்­மு­றை­யாக, 10,800 புள்­ளி­களை தாண்­டி­யது. 2017 டிசம்­ப­ரில், சென்­செக்ஸ் முதன்­மு­றை­யாக, 34 ஆயி­ரம் புள்­ளி­களை எட்­டி­யது. இதை­ய­டுத்து, 16 வர்த்­தக தினங்­களில், மேலும், 1,000 புள்­ளி­கள் உயர்ந்து, புதிய சாதனை படைத்­துள்­ளது. நேற்று வர்த்­த­கத்­தின் இறு­தி­யில், சென்­செக்ஸ், 310.77 புள்­ளி­கள் உயர்ந்து, 35,081 புள்­ளி­களில் நிலை கொண்­டது. நிப்டி, 88.10 புள்­ளி­கள் அதி­க­ரித்து, 10,788 புள்­ளி­களில் நிலை பெற்­றது.

கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களின், சிறப்­பான மூன்­றா­வது காலாண்டு நிதி­நிலை அறிக்கை, நடப்பு நிதி­யாண்­டில், அர­சின் கூடு­தல் கடன் தேவை குறை­யும் என்ற தக­வல் ஆகி­யவை, பங்கு முத­லீ­டு­கள் அதி­க­ரிக்க துணை புரிந்­துள்ளன. குறிப்­பாக, வங்கி, ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு, தக­வல் தொழில்­நுட்ப நிறு­வன பங்­கு­கள் விலை உயர்வை சந்­தித்­தன.

மூலக்கதை