68வது தேசிய சீனியர் கூடைப்பந்து : அரியானாவை வீழ்த்தியது தமிழகம்

தினகரன்  தினகரன்

சென்னை: தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், தமிழக ஆண்கள் அணி அரியானாவை வீழ்த்தியது. சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கிய இந்த தொடரின் ஆண்கள் பிரிவில், தமிழகம் - அரியானா அணிகள் மோதின. அபாரமாக விளையாடி புள்ளிகளைக் குவித்த தமிழகம் 113 - 58 என்ற கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

மூலக்கதை